புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2016

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது குறித்து வருகை தந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் துண்டு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.