புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை
வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் ஊர்காவல்துறை நீதவான் எம்.றியால் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பிலும் குறித்த அதிகாரியை நீதவான் மிக கடுமையாக எச்சரித்துள்ளார் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த கொலை வழக்கில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சியம் மற்றும் இந்த குற்றச்சாட்டோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 11ஆம், 12ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரனை கடந்த 20ஆம் திகதி விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்து.
இதன் போது நீதவான் குறித்த வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவர் முன்னர் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரி இவ் வழக்கு தொடர்பில் குறித்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்ய நீதவான் உத்தரவிட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே இன்றைய வழக்கு விசாரணையின் போது தாம் அவ்வாறு தெரிவித்திருந்தேனா என குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் நீதவான் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிடக் கூடாது எனவும் நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடன் குற்றப்புலனாய்வுஅதிகாரி பேசியிருந்தமை தொடர்பிலும் நீதிவான் குறித்த குற்றப்புலனாய்வு அதிகரியிடம் வினவியிருந்தார்.
அத்துடன் குற்றப்புலனாய்வு அதிகாரியுடைய இத்தகைய செயற்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கையினுடாக விளக்கம் கோருவேன் எனவும் நீதிவான் தெரிவித்தார். இன்றையதினமும் மரபணு விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகது.
இந்த வழக்கு மே மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் அதுவரை 10 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்படுள்ளது.

ad

ad