புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

சுவிஸில் மகப்பேறு காலத்தில் தந்தையருக்கு விடுமுறை கிடையாது: பாராளுமன்ற கீழ்சபை அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் மகப்பேறு காலத்தில் தந்தையர்களுக்கு 2 வாரங்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற பிரதிவாதிகளின் கோரிக்கையை பாராளுமன்ற கீ
ழ்சபைக்கு நிராகரித்துள்ளது.
சுவிஸில் இளம்வயது தம்பதியினர்களுக்கு குழந்தை பிறந்தால், தந்தையருக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் தாய்மார்களுக்கு 14 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, தந்தையர்களின் விடுமுறையை 2 வாரங்களாக அதிகரிக்க வேண்டுமென பல அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதரவு குழுக்கள் முயற்சி செய்து பாராளுமன்றத்தை அனுகினர்.
இதில், நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 பாராளுமன்ற உறுப்பினர்களின் 97 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் 5 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை, 2 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பிரதிவாதிகளின் இந்த கோரிக்கையை பாராளுமன்ற கீழ் சபை நிராகரித்துள்ளது.
மேலும், பல்வேறு நிறுவனங்கள் மகப்பேறு விடுமுறை விடயத்தில் ஊழியர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுத்துள்ளது, அதுவும் இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட இடம் அல்லாத காரணத்தால் எங்களின் தலையீடு இதில் அதிகமாக இருக்காது என கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் சராசரியாக 12.5 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது, சுவீடனில் இந்த விடுமுறையை பெற்றோர் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad