புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

தமிழ் தலைமையை சிங்கள இனவாதிகள் பிரித்தாள சதி

சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் சாணக்கியம் அறியாதவர்கள் அல்ல என்கிறார் குமரகுருபரன் நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வ­ரனின் சிந்­த­னைக் கும் கூட்­ட­மைப்பு
தலை­மையின் சிந்­த­னைக்­ கு­மி­டையே ஒரு இடை­வெளியை உரு­வாக்க முயல்­கின்ற சிங்­கள இன­வா­தி­களின் செயல் விஷ­மத்­த­ன­மா­னது. தமிழ் தலை­மையை சிங்­கள இன­வா­திகள் பிரித்­தாளும் வகையில் கூட்­ட­மைப்பு தலைவர் சம்­பந்­த­ரையும் நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வ­ரரையும் இன­வாத கண்­கொண்டு தகர்த்­தெறிய முயல்­வதை சம்­பந்­தரும் விக்கி­னேஸ்­வ­ரனும் அறி­யா­த­வர்கள் அல்ல. சம்­பந்­தரும் விக்கி­னேஸ்­வ­ரனும் ஒரு­வரை ஒருவர் புரிந்து கொண்­டனர். விக்கி­னேஸ்­வரன் தமிழ் மக்­களின் உரிமை பற்றி கடும் கரி­சனை கொள்­வது தமிழ் மக்கள் அவ­ருக்கு கொடுத்த ஆணை. இது எவ்­விதம் பிரி­வி­னை­யாக முடியும். இன­வா­தி­க­ளான இரா­வ­ணா­ப­லய, பொது­பல சேனா, சிங்­கள ராவய போன்­றவை காமாழைக் கண் கொண்டே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பிரி­வினை என்னும் கோஷத்துள் அடக்க முயல்­கின்­றனர் என ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் தமிழ் தேசிய பணிக்­கு­ழுவின் செய­லா­ளரும் முன்னாள் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான கலாநிதி நல்­லையா கும­ர­கு­ரு­பரன் தெரி­வித்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­விக்­கையில்,
பச்சை இன­வா­தி­க­ளான இரா­வ­ண­ாப­லய, பொது­பல சேனா, சிங்­கள ராவய போன்­றவை பல்­லினம் வாழும் இலங்­கையில் சிங்­கள தேசம் ஆக்க முயல்­வதே பிரிவினை­வாதம் தான். இவர்­க­ளுக்கு உரி­மை­களைப் பற்றி பேசும் தமிழ் தலை­வர்­களை பிரி­வி­னை­வா­தி­க­ளாக கூறு­வ­தற்கு என்ன அரு­கதை இருக்க முடியும். விக்கி­னேஸ்­வ­ர­னையும் சம்­பந்தரையும் அவர்கள் யார் அவர்கள் அறி­வுத்­திறன் என்ன? சாணக்­கியம் என்ன என்­பதை மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் ஏன் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட ஜே.வி.பி தலை­வர்­களும் நன்கு அறி­வார்கள். இன்­றைய கால­கட்­டத்தில் நன்கு சிந்­திக்க கூடிய சிந்­தனை தெளிவுள்ள சிங்­கள மக்­களும் இன்­றைய தமிழ் மக்­களின் மனோ­நி­லையை நன்கு அறி­வார்கள்.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை எனும் வகையில் பல்­வேறு தட­வைகள் ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் தான் தமிழர் அபி­லா­ஷை­க­ளுக்கு ஏற்ற அர­சியல் தீர்வு என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றது. மட்­டு­மின்றி இலங்கை அரச விழாக்­க­ளிலும் இலங்­கையர் என்னும் வகையில் பங்­கு­பற்றி வரு­கின்­றார்கள். இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடி­யாத இன­வா­திகள் தான், கூட்­ட­மைப்பை தடை செய்­யுங்கள், விக்கி­னேஸ்­வ­ரனை கைது செய்­யுங்கள், எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யிலி­ருந்து நீக்­குங்கள் என்று கூட்டம் போட்டு கூக்­குரல் இடு­கின்­றனர். இந்த இன­வா­தத்தை நல்ல சிந்­த­னை­யுள்ள சிங்­கள மக்கள் நன்கு அறி­வார்கள்.
விக்­கி­னேஸ்­வரன் தமி­ழர்­க­ளுக்­கான தீர்வை குழப்­பு­கிறார் என்று டிலான் பெரேரா கூறி­யி­ருப்­பது வேடிக்­கை­யான விடயம். அர­சியல் அமைப்பு மாற்­றமோ அல்­லது புதி­தாக அமைந்­தாலோ அதில் தமி­ழ­ருக்கு இருக்க வேண்­டிய தீர்வு இதுதான் என்று கூறி­யி­ருப்­பவர் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன். இவர் கூறி­யி­ருப்­பது பாத­க­மா­ன­தாக இருந்­தி­ருந்தால் இது­வரை கூட்­ட­மைப்பு தலைமை அதற்கு பதி­ல­ளித்­தி­ருக்கும். ஆனால் பரி­சீ­லிக்­கின்­றார்கள். தனிப்­பட்ட நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனே அவ­ரு­டைய எந்­த­வொரு பின்­ன­ணி­யி­லி­ருந்து பார்த்­தாலும் அவர் ஒரு இன­வா­தி­யாக சித்­த­ரிக்­கப்­பட முடி­யாது.
ஆனால் தமிழ் மக்கள் கொடுத்­தி­ருக்­கின்ற மக்கள் ஆணைக்கு விசு­வா­ச­மாக அபி­லா­ஷை­க­ளுக்கு விசு­வா­ச­மாக அவர் தனது பணியை செய்து வரு­கின்றார் என்பதுதான் உண்மை என்றார்.

ad

ad