28 ஏப்., 2016

நட்சத்திர கிரிக்கெட் விளம்பரம் - திரையுலகம் மீது பாயும் ஜெ., அரசாங்கம்


 கடந்த வாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம்,புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டும் பொருட்டு சென்னையில் பிரமாண்ட நட்சத்தி கிரிக்கெட் போட்டி நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி ஒளிப்பரப்பு உரிமையை 9கோடி தந்து சன் டிவி வாங்கியிருந்து.

 நட்சத்திர கிரிக்கெட் இடைவேளையின் போது,திமுகவின் சொன்னீங்களே? செய்தீர்களா என்ற தேர்தல் வாக்குறுதி விளம்பரம்உட்பட பல விளம்பரங்களை ஒளிப்பரப்பியது. திமுகவின் தேர்தல்வாக்குறுதி விளம்பரம் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றுசேர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி திமுகவுக்குசாதமாக்கியது. இதை தாமதாக உளவுத்துறை மூலம் உணர்ந்தஜெயலலிதா, ஜெயா டிவி நிர்வாகிகளை அழைத்து கோபமாக விசாரணை நடத்தியுள்ளார்.

 நடிகர் சங்கம், நம் சேனலுக்கு கிரிக்கெட்நேரடி ஒளிப்பரப்பு உரிமையை தரவில்லை எனக்கூறியதாக தெரிகிறது. இதில்கோபமாக ஜெயலலிதா, தேர்தலில் சினிமா நடிகர்கள் திமுகவுக்குஆதரவாக உள்ளார்களா, அவுங்கள சும்மா விடாதிங்க என கோபத்தை காட்ட அதிகாரிகள்உடனடியாக களத்தில் இறங்கிவிட்டனர்.

 தலைமை செயலகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தகவல்பறந்தது. மாவட்ட ஆட்சியர்கள் பெரும்பாலானோர் களத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். அதன்படி சினிமா திரையரங்குகளில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உடனடியாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியிடம்புகார் செய்யலாம் என்றும், வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த குழுவில், துணைகாவல் கண்காணிப்பாளர், வணிகவரி அலுவலர் இருப்பர். 

இந்த குழு அதிரடி சோதனையும்நடத்தும், புகார் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் தொலை பேசியில் புகார்தெரிவிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 சினிமா திரையரங்களில் அரசு நிர்ணயித்த டிக்கட்விலை அதிகபட்சம்மே 20 ரூபாய் தான். ஆனால் தற்போது திரையரங்குகளில் குறைந்த பட்சகட்டணம்மே 70 ரூபாய் தான். இது அரசு அதிகாரிகள் மட்டும்மல்ல அனைத்து தரப்பினருக்கும்மேதெரியும். அப்படியிருந்தும் அவைகளை வேடிக்கை பார்த்த அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுப்போம் என்பதன் பின்னணியில் ஜெ., அரசாங்கம்மே உள்ளது என்கின்றனர் திரையரங்குகளின் தரப்பில்.