புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2016

ரணில் – பிரபாகரன் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் வெளியிட்ட அமைச்சர்

விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும்
, உளப்பூர்வமாகவும் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் எழுவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தலைமைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது செயலமர்வு கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
”பண்டாரநாயக்க – செல்வநாயகம் இருவரும் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க – பிரபாகரன் ஆகியோர் சமாதன ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டனர்.
அந்த இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரம் இல்லாமல் ஒப்பந்தம் குறித்து பேசிய, அதில் கைச்சாத்திட்டவர்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் எழுந்தன.
பண்டாரநாயக்க மற்றம் செல்வநாயகம் குறித்து தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் சந்தேகங்கள் இருந்தன. இவர்கள் இருவரும் உண்மையாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் இருந்தது.
அதேபோல் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரபாகரன் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.
இவர்கள் இருவரும் உண்மையில், உள்ளார்த்தமாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.
அதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.
ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டவர்கள், சமாதானம் பேசியவர்கள் அதனை உயர்மட்டத்தில் மாத்திரம் வைத்துக் கொண்டனர். கீழ் மட்டத்திற்கு கொண்டுவரவில்லை. மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்கவில்லை. ‘பண்டா – செல்வா ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டபோது நான் பிறந்திருக்கவில்லை.
ஆனால் ரணில் – பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது நான் இருந்தேன். இதனால் இது குறித்து எனக்கு நன்கு தெரியும். சமாதன ஒப்பந்தம் குறித்து புலித்தரப்பினர் இது ஒரு ‘சமாதானப் பொறி’ என்று வெளிப்படையாக கூறினர். சமாதானத்தை யாரும் நம்பவில்லை. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தனர்.
அதேபோல் தெற்கில் எதனைக் கூறினார்கள். இந்த சமாதான ஒப்பந்தத்தினால் ரணில் விக்ரமசிங்க முழு நாட்டையும் விற்று விட்டதாகவும், காட்டிக் கொடுத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இங்குள்ள இனவாதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அதேபோல் அங்குள்ள இனவாதிகள் அவ்வாறு கூறினர். இவ்வறான இனவாத செயற்பாடுகளினால் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.” என்றும் கூறினார்.

ad

ad