புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஏப்., 2016

நடிகர் சுரேஷ் கோபி உள்பட 6 பேர் டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக நியமனம்


பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் டாக்டர் நரேந்திர ஜாதவ், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஆகிய 6 பேரை டெல்லி மேல்–சபை உறுப்பினர்களாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த 6 பேரின் நியமனம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.