புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2016

தொலைக்காட்சி விவாதத்தில் மோதல்: மந்திரி-வேட்பாளர் காயம்


கேரளாவில் மே 16-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கொல்லம் அருகே உள்ள சவரா தொகுதியில் வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒரு தொலைக்காட்சி சேனல் ஏற்பாடு செய்தது. 

இதில் காங்கிரஸ் கூட்டணியின் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி வேட்பாளரும், கேரள தொழிலாளர் துறை மந்திரியுமான சிபு பாபு ஜான், இடதுசாரி வேட்பாளர் விஜயன் பிள்ளை உள்பட சிலர் கலந்து கொண்டனர். 

அப்போது குடிநீர் பற்றாக்குறை பற்றி விவாதம் நடந்தது. அதற்கு மந்திரி சிபு பாபு ஜான் அளித்த பதிலால் ஆத்திரமடைந்த சிலர் கற்களையும், நாற்காலிகளையும் தூக்கி வீசினார்கள். இதில் ஒரு கல் பட்டு சிபு பாபு ஜான் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல விஜயன் பிள்ளை மீது ஒரு நாற்காலி விழுந்ததில் அவரும் காயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மோதல் தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ad

ad