புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து! கோடை வெயிலால் நடந்த விபரீதம்- பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

தனியார் கல்லுாாிகளில் மிகவும் பிரபலமான எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்று, சர்தார்
படேல்சாலையில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின்போது, ஓட்டுநரின் எச்சரிக்கையால் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவா்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனா்.
எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு செந்தமான குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து, வழக்கம் போல அடையாறிலிருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு போத்தேரியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி பயணித்துள்ளது.
காலை 7 மணியளவில் பேருந்து சர்தார் படேல் சாலையை கடக்கும் போது, வாகனத்திலிருந்து புகை வெளிவருவதைக் கவனித்த ஓட்டுநர் ஆனந்த், பேருந்தை உடனே சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளாா். மேலும், மாணவா்களை பேருந்தை விட்டு வெளியேறும் படிகூறியுள்ளாா்.
இதை தொடா்ந்து,பேருந்து தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. சம்பவத்தை அறிந்த பொலிசார். அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தொிவித்துள்ளனர்.
உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னா், மாணவர்கள் அனைவரும் மாற்று பேருந்தில் பல்கலைகழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தக்க சமையத்தில் மாணவர்களை பேருந்து விட்டு வெளியேற்றிய ஓட்டுநர் ஆனந்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இயந்திர கோளாறு, மின்சார கசிவு காரணமாகவோ அல்லது பேருந்தின் பெட்ரோல் டேங்க் முழுமையாக இருக்கும் பொழுது கோடை வெயில் காரணமாகவோ தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தொிவித்துள்ளனர்.

ad

ad