புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2016

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் யார், யார்?

சில சலுகைகளைப் பெறுவதற்காக நட்சத்திர பேச்சாளரின் பட்டியலை இந்தியத் தேர்தல் கமிஷனிடம் அந்தந்தக் கட்சிகள் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 39 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வருமாறு;-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி, தலைமை கழக நிர்வாகி பி.மகாலிங்கம், அ.தி.மு.க. எம்.பி.க்கள் வேணுகோபால், அன்வர்ராஜா, பி.குமார், விஜிலா சத்யானந்த், எஸ்.ஆர்.விஜயகுமார்,

த.மா.கா.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத், என்.செல்வராஜ், ஏ.கே.செல்வராஜ், பி.டி.இளங்கோவன், கவிஞர் முத்துலிங்கம், நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், அருள்மணி, கே.ஆர்.சிங்கமுத்து, வையாபுரி, தியாகு, குண்டுகல்யாணம், சுந்தரராஜன், மனோபாலா, ஏ.கே.ராஜேந்திரன், அனுமோகன், செந்தில்,

சினிமா இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான், நாஞ்சில் பி.சி.அன்பழகன், சக்தி சிதம்பரம்,

நடிகைகள் டி.கே.கலா, விந்தியா, வெண்ணிற ஆடை நிர்மலா, ஆர்த்தி, செய்தி வாசிப்பாளர்களான நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு உள்பட 39 பேர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் பிரசாரம் செய்யும் போது, அமர்ந்துள்ள வாகனத்துக்கான செலவுகள், அந்தத் தொகுதியின் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேராது.சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் யார், யார்?

ad

ad