புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

கிடைத்தது ’கிரீன்’ சிக்னல்: ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா
கால்பந்து அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து கிளப்புக்காக தொழில்முறை கால்பந்து லீக் போட்டிகளில் நெய்மர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் யூன் மாதம் நடைபெறும் கோபா அமெரிக்கா சாம்பியன்ஷிப் மற்றும் ஆகஸ்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பிரேசில் அணிக்காக நெய்மர் விளையாட வேண்டியுள்ளது.
இதனால் இந்தப் போட்டிகளுக்காக அவரை விடுவிக்க வேண்டும் என பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பார்சிலோனா அணி நிர்வாகம், ஒலிம்பிக் போட்டியின் போது நெய்மரை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை கோபா அமெரிக்கா போட்டிக்கு அவரை விடுவிக்க இயலாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் நெய்மர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
பார்சிலோனா அணி நிர்வாகம் தனது அறிக்கையில் "நெய்மரை ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு மட்டுமே விடுவிக்க முடியும் என்ற தங்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மார்க்கோ போலோ டெல் நீரோவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளது.

ad

ad