புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2016

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு : நடிகர் கார்த்திக்


தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. ஆனால், இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதால் அந்த அணியில் இடம் பெறவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியாததால் அவர் ஆறு சிறிய கட்சிகளை இணைத்து விடியல் கூட்டணியை உருவாக்கினார். 

இந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற மனநிலையில் இருந்த நடிகர் கார்த்திக்கின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. 

தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த கட்சி இன்று வெளியிட்டு உள்ளது. தென்மாவட்டங்களில்  30 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதல் - அமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’