புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

ஜெயலலிதா உருவபொம்மை எரிக்க முயற்சி - திருவாரூரில் பரபரப்பு



திருவாரூரில் நேற்று திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக தன்னையும், மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டிக்கு ஆடலரசன், நன்னிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம்.பி. துரைவேலன், கீழ்வேளூர் உ. மதிவாணன், வேதாரண்யம் பி.வி. ராஜேந்திரன், நாகப்பட்டினம் ஜபருல்லா ஆகிய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார்.

கலைஞருக்கு முன்னதாக பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பினார். மக்களைச் சந்திக்காத முதல்வர் எப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  திருவாரூர் பேருந்து நிலையம் முன்பாக திரண்ட  அதிமுகவினர் இளங்கோவன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து  அவரது உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் இளங்கோவன் உருவபொம்மையை எரிப்பதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் திருவாரூர் பேருந்து நிலையத்தில் திரண்டு முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad