புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்-600 போலீசாரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப்பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமை வகித்த ராம், யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்புபட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த 24ம் திகதி திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ராம், பயங்கரவாத விசாரணைப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
முன்னதாக, புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட
தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடையை ஒத்த சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவரும் கடத்திச் சென்றதாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு குறித்த நபரின் மனைவியால் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ad

ad