புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

வேட்புமனு தாக்கலின்போது விஜயகாந்த் கேட்ட கேள்வி: ஆடிப்போன அதிகாரி

வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக
தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் வருகை தந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ததும், உறுதிமொழி ஏற்பது வழக்கம். அதேபோல விஜயகாந்த்தையும் உறுதிமொழி எடுக்குமாறு, தேர்தல் அலுவலர் முகுந்தன் அறிவுறுத்தினார்.
இதனால் சற்று கோபமடைந்த விஜயகாந்த், ''வேட்புமனு தாக்கல் செய்யும்போதே உறுதி ஏற்கச் சொல்கிறீர்கள். பின்னர் வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது.
அல்லது சிலர் வாபஸ் பெற்று விடுகின்றனர். எனவே ஒரேடியாக வேட்புமனு பரிசீலனைக்குப்பின், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் வேட்பாளர்களிடம் உறுதி மொழி ஏற்கச் செய்யலாமே'' என்றார்.
விஜயகாந்த் முன்வைத்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே அங்கிருந்தவர்கள் கருதினர். இருப்பினும், விதிமுறைப்படி அப்படி நடைபெறுவதில்லை என்பதால், வட்டாட்சியர் கையை பிசைந்தார்.
இதையடுத்து பிரேமலதாவும், கட்சி நிர்வாகிகளும், விதிமுறைப்படிதான் அதிகாரியால் செயல்பட முடியும். எனவே உறுதி மொழியை வாசித்துவிடுங்கள் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உறுதிமொழியை வாசித்தார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்த இடத்தில் ஒரு சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.

ad

ad