புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

'சகாயத்தின் கேள்விக்கு கருணாநிதியின் பதில் என்ன?' - வினவுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்

 "விகடன் டாட் காமில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன.
அரூர் தொகுதியை மாற்றிக்கொள்ள வி.சி.க கேட்ட பிறகு, மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு கூடி திருவிக நகர் தனித்தொகுதியுடன் பரிமாற்றம் செய்துகொண்டோம்.
அதுபற்றி குறிப்பிடும் கட்டுரையில், வைகோ அவர்களை பற்றி அவதூறு செய்துள்ளனர். ம.தி.முக, சிபிஐ(எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை இணைத்து - மெகா கூட்டணியாக மாற்றியதில் வைகோவின் பங்கு பிரதானமானது. இன்றைக்கு தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான வெற்றிக் கூட்டணியாக, முன்னணியில் நடைபோட்டுவருகிறது. 6 கட்சிகளும் 14-ம் தேதியே சுமூகமாக தொகுதி உடன்பாடு செய்து கொண்டு, வேட்பாளர்களையும் அறிவித்துள்ளோம்.
இந்த நிலையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது குறித்து வைகோ மீது அவதூறு செய்து எழுதுவது உள்நோக்கத்தோடு களங்கம் கற்பிக்கும் முயற்சியாகும். தொடர்ந்து இத்தகைய ஊக செய்திகளை வெளியிடுவது ஆரோக்கியமான இதழியல் நடைமுறை அல்ல. விகடன் குழுமம் இதுபோன்ற பதிவுகளை கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்!'
- மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ குறித்து விகடன்.காமில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்கூறிய கருத்தை பதிவிட்டிருந்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் பேசினேன்.  

" தமிழக அரசியலில் மெகா கூட்டணியாக நாங்கள் உருவெடுத்ததில் மிக முக்கியப் பங்கு வைகோவுக்கு உண்டு' என குறிப்பிட்டவர் தொடர்ந்து பேசத் துவங்கினார்.
’’கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி மக்கள் நலக் கூட்டியக்கத்தைத் தொடங்கினோம். தொடக்கத்தில் அரசியல் அணியாக இதை நாங்கள் பார்க்கவில்லை. பத்து மாதங்கள் நாங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டோம். இதற்கு முன்பு இப்படியொரு இயக்கம் செயல்பட்டதில்லை. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம், ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சி.பி.ஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் என பலவற்றையும் முன்னெடுத்தோம். தேர்தலுக்கு முன்பே எந்த அரசியல் கட்சியும் பொது செயல்திட்டத்தை முன்வைத்தில்லை. நாங்கள் செய்தோம். மக்கள் நலக் கூட்டியக்கத்தை கூட்டணியாக விரிவுபடுத்தியதில் வைகோவுக்கு பிரதான பங்குண்டு.

எங்கள் அணியில் தே.மு.தி.கவுக்கு 124 இடங்களை ஒதுக்கினோம். தே.மு.தி.கவின் இடங்களை த.மா.காவுக்கு ஒதுக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தையும் ஜி.கே.வாசனையும் எங்கள் அணிக்குக் கொண்டு வந்ததில் மிகப் பெரிய பங்கு வைகோவுக்கு இருக்கிறது. அவரால்தான் இவ்வளவு பெரிய மெகா கூட்டணி சாத்தியப்பட்டது. தி.மு.க, அ.தி.மு.கவுக்கு எதிரான வலுவான அணி இப்போதுதான் உருவாகியிருக்கிறது. ஆறு கட்சித் தலைமை என்று எங்களைச் சொல்லும்போது, 'நேர்மையாக இருக்கக்கூடிய கட்சிகள்' என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ஊழல் ஒழிப்பு, கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை இதுவரை யாருமே முன்னெடுத்ததில்லை. தமிழ்நாடு அரசியலில் புதிய சக்தி இது. அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராக இந்த அணி உருவானதை கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே விரும்பவில்லை. அதனால்தான், ம.தி.மு.க, தே.மு.தி.க, த.மா.காவை உடைக்கும் முயற்சியில் தி.மு.க இறங்கியது. தோல்வி பயத்தால்தான் தி.மு.க இத்தனையும் செய்தது. பழம் நழுவி எங்கள் பக்கம் விழுந்ததை கலைஞரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து விரட்டப்பட்ட சரத்குமாரை மீண்டும் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. மக்கள் மத்தியில் மிகச் சிறந்த மாற்று என்ற கருத்து எங்கள் மேல் விழுந்துவிட்டது. ஐம்பது சதவீத வாக்காளர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். தி.மு.கவும் எங்களை அடிக்கிறது. 'எனக்கு வலிக்கவில்லை' என்ற கோணத்தில் அ.தி.மு.கவும் எங்களை அடிக்கிறது.

சகாயம் தனது அறிக்கையில், 'இருபது ஆண்டுகளாக கிரானைட் முறைகேடுகள் நடக்கிறது' என்றார். 'ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி இழப்பு' என்கிறார். இதில், பத்தாண்டுகள் தி.மு.க ஆட்சியில் இருந்தது. இதைப் பற்றி மேடைகள் தோறும் கலைஞரிடம் கேள்வி கேட்கிறேன். ஒருமுறையாவது பதில் கொடுத்தாரா? இத்தனைக்கும் சகாயம் அரசியல்வாதி அல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரி. எனவே, இந்த இருதுருவ அரசியலுக்கு முடிவு கட்ட கடுமையாக உழைக்கிறோம். இதற்கு எதிராக நாங்கள் போராடும்போது, எதிரிகள் எங்களை அடிக்கிறார்கள். கூடவே, நண்பர்களும் சேர்ந்து அடிக்கும்போதுதான் கொஞ்சம் வலிக்கிறது. அது எதிரிகளுக்கு சாதகமாகப் போய்விடுமோ? என்ற வருத்தம் எனக்குண்டு.
க்குப் பிறகு தமிழக அரசியலை தி.மு.கவும் அ.தி.மு.கவும் சீரழித்துவிட்டார்கள். இவர்களுக்கு மாற்றாக ஒரு வலிமையான மாற்று உருவானதை மக்கள் விரும்புகிறார்கள். த.மா.கா எங்கள் அணிக்கு வந்தது தமிழ்நாட்டிற்கே நல்லது. தே.மு.தி.க, த.மா.காவை கொண்டு வந்ததில் மிகப் பெரிய பங்கு வைகோவுக்கு இருக்கிறது. கலைஞருக்கு எதிராக வைகோ சொன்ன கருத்துக்கு எதிராக கொந்தளிப்பு உருவானபோது, மன்னிப்பு கேட்டார் வைகோ. அதன்பிறகும் அவருடைய கொடும்பாவியைக் கொளுத்துகிறார்கள் என்றால், வைகோ மீது தி.மு.கவுக்கு உள்ள கோபத்தைப் புரிந்து கொள்ளலாம். மக்களின் பேராதரவோடு களத்தில் நிற்கிறோம். நிச்சயம் வெல்வோம்" என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஜி.ராமகிருஷ்ணன். 

ad

ad