புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும்… கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? லக லக ராமராஜன்!

 'எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும், கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா?' என்று ராணிப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில்
நடிகர் ராமராஜன் கேள்வி எழுப்பினார்.
ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்ட நடிகர் ராமராஜன், ''தேர்தல் தேதி அறிவிச்சு ஒன்றரை மாசம் ஆகிடுச்சு. இன்னும் சில கட்சியில யாரை சேக்குறது, யாரை போடறதுன்னு பேசிக்கிட்டே இருக்காங்க. ஆனா அம்மா தெளிவு, தெளிந்த நீரோடை. ஒன் மேன் ஷோ. எடுத்தா எடுத்ததுதான். அதனால்தான் 234 தொகுதிக்கும் முன்னாடியே வேட்பாளர்களை அறிவிச்சுட்டாங்க. ஆனா கருணாநிதி, 'பழம் எப்ப நழுவி பால்'ல விழும்னு பாத்துக்கிட்டு இருந்தார். அது அழுகி வெளியில விழுந்துடுச்சு.

அந்த கூட்டணியில இரண்டு நாலாச்சு, நாலு ஆறாச்சு. கேட்டா ஆறுமுக கூட்டணியாம். அது தேர்தலுக்கு தேர்தல் மாறும் முகம். எல்லாரும் இங்க இருந்து போனவங்கதான். ஒரு ஊர்ல பஞ்சாயத்துனா ஒரு சொம்பு ஒரு நாட்டாமை இருந்தாதான் சரியா வரும். ஆறு சொம்பு ,ஆறு நாட்டாமைன்னா விளங்காது. அவங்க முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த், 11-ம் தேதி கும்மிடிப்பூண்டில வேட்பாளர் யாரு, கட்சி யாருன்னு அறிவிக்காம என்னமோ பேசிட்டு போனாரு. முதலமைச்சராகனும்னு ஆசைப்படறவங்களுக்கு, சிந்திக்க தெரிஞ்சிருக்கணும். ஆனால், குருட்டு கோழி தவிட்டுக்கு ஆசைப்பட்ட கதைதான் அவர் கதை.
ஆனால், அம்மாவை பார்த்து இந்தியாவில இருக்கிற மற்ற முதலமைச்சர்கள் எல்லாம் அப்படியே ஷாக்காகி போயிருக்காங்க. எப்படி இந்த மாதிரி திட்டம் எல்லாம் போட முடியுதுன்னு. 15 வருஷம் மத்திய அரசு சப்போர்ட் இருந்தும் தி.மு.க. ஒண்ணும் கிழிக்கல. இப்ப வந்து 'சொன்னீங்களே… செஞ்சீங்களா'ன்னு கேக்குறாங்க. செஞ்சதாலதான் நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில ஜெயிச்சோம். மின் மிகை மாநிலமா மாத்தியிருக்காங்க அம்மா. கர்நாடகாவுல பேசி காவிரி தண்ணீரை கொண்டு வந்தாங்க. எங்களுக்கு தமிழ்நாட்டுல ஹவுஸ் ஃபுல் ஆயிடுச்சு, அதனாலதான் அந்தமான்லயும், கேரளாவுலயும் கவுன்சிலரை நிக்க வச்சு ஜெயிக்க வச்சிருக்காங்க. அது உங்களால முடியுமா?

ஸ்டாலின் நமக்கு நாமேன்னு ஊரை சுத்தி வந்தாரு. ரோட்டு கடையில தோசை வாங்கி சாப்பிட்டாரு. அந்த மாவு அம்மா கிரைண்டர்ல ஆட்டுனது. தொட்டுக்கிட்ட சட்னி அம்மா மிக்சில அரைச்சது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு யார் போடுவா. 10 ரூபாய் இருந்தா ஒரு வேளை சாப்பாடு முடிஞ்சிப்போச்சு. எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும்… கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? அம்மா ஆட்சிக்கு வரும்போது சுத்தமா இருக்கும். அடுத்து இவங்க வந்து குட்டிச்சுவராக்கிடுவாங்க. அதனால இந்த முறையும் அம்மாவை முதல்வர் ஆக்குனா 2021-ல நாம தான் டாப்பு.” என்றார்.

ராமராஜன், டி.வி குட்டி போடுமான்னு கேட்ட கேள்வியை கேட்டு, கூடியிருந்த கூட்டம் அப்படியே ஷாக்காகி நின்றது!

ad

ad