புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

233 அ.தி.மு.க வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்


தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 234 தொகுதி களில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க. தோழமைக்  கட்சிகளும் போட்டியிடுகின்றன. 

ஜெயலலிதா கடந்த 25-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அதே தினத்தன்றே 233 தொகுதி அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களும் மனு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 233 தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமை மதியம் 12.50 மணி முதல் 1.20-க்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இன்று மதியம் 12.50க்கு மேல் 1.20 வரை குருஹோரை உச்சத்தில் இருப்பதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களான 233 பேரும் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அதற்கு வசதியாக 233 வேட் பாளர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதம் நேற்று வழங்கப்பட்டது. மற்ற ஆவணங்கள்  ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை ஒருங்கிணைத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் 226 பேரும், கூட்டணி வேட் பாளர்கள் 7 பேரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்பு மனு கொடுத்து அவர்கள் உறுதி மொழியை வாசித்தனர். 

ad

ad