www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

செவ்வாய், டிசம்பர் 10, 2013

சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு! தலைவர் கந்தையா சிவஞானம்
வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும்  என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!
சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது,

அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

இதற்குப் பதிலளித்த கவிஞர்,

நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.
குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி
விழுப்புரம் அருகே கருங்காலிபட்டு காலனியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சிவக்குமார் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் வினோத் (27) என்பவரும் நெருங்கிய
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்: இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம்
கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.
யாழில் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு: காவல் துறையினர் - பெண்பிள்ளைகள் குறித்து பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும்: யாழ் அரச அதிபர்
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் 
ஜெனிவாவில் இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார்!- சரத் பொன்சேகா
சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள்
வட மாகாண சபையில் இன்று வரவு செலவுத் திட்டம்!- முதலமைச்சர் சமர்ப்பிக்கிறார்!
வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதடியில் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமர்ப்பிக்கவுள்ளார்.

மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டம்
மலக்குழிக்குள் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடையில் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடை மற்றும் மலக்குழியில் நிகழ்ந்த மரணங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரயில்வே துறையில் மனித கழிவை மனிதனே