புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2022

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் என்றுமே சமூகத்தின் மீதான பற்றுறுதியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றுப் பாதையில் பல சம்பவங்கள் அதற்குச் சான்று.
மண்ணின் மீதும், மக்கள் மீதும் அக்கறையுடன் செயற்படும் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதங்களாக அதன் மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தி செயற்படுத்திவரும் “சமுதாயச் சமையலறை” பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
பல்கலைக் கழகத்துக்கு வருகின்ற மாணவர்கள் பலர் ஆகக் குறைந்தது ஒரு நேர ஆகாரத்தையேனும் பெற்றுக் கொள்வதற்கு சிரமப் படுகிறார்கள் என்பதை அறிந்த விரிவுரையாளர்கள் சிலர், தமக்கிடையே பங்களிப்பைச் செய்து, ஒரு சில மாணவர்களுக்குப் பசியாறச் செய்த கைங்கரியம் இன்று தினமும் சுமார் 1200 மாணவர்கள் வயிறாறச் சாப்பிடுவதற்கு வழிசெய்திருக்கிறது.
இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத ஒரு முறைமை அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஓரிண்டு விரிவுரையாளர்கள் தங்கள் பணத்தை வழங்கி, தாமே நின்று சமைத்து, மாணவர்களின் உதவியுடன் அவற்றை இன - சமய வேறுபாடின்றி பகிர்ந்து பங்கிட்டு வழங்கி வந்தனர். தங்கள் கண் முன்னே நூற்றுக் கணக்கான மாணவர்கள் பசியாறுவதைக் கண்ட ஏனைய பலர் தாமும் இணைந்து கொண்டதன் விளைவாக இன்று வரை தடையின்றி சுமார் 1200 மாணவர்கள் மதிய உணவைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தினமும் சமையலுக்குத் தேவையான செலவீனத்தை பல்கலைக்கழக சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகவும், சிலர் தனியாளாகவும் வழங்கி வருகின்றனர். அரச நிதியில் எந்தச் செலவுமில்லாமல் கூட்டுப் பொறுப்புடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் கலைப்பீடத்தில் எழுந்த இந்த “சமுதாயச் சமையலறை” செயற்பாடு இப்போது பிரதான வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம் ஆகியவற்றின் மாணவர்களுக்கும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் பரீட்சைக் காலங்களிலும் பல மாணவர்களுக்கு வரப்பிரசாத மாகிறது.
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்திருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் இங்கு நேரடியாக விஜயம் செய்து மாணவர்களுடன் தானும் அமர்ந்து மதிய உணவை உண்டார். தற்போது ஏனைய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் விலையேற்றம் காரணமாக உணவைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களுக்கு மாற்றீடாக இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் எனப் பரிந்துரைந்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலகர்த்தாக்கள், கருத்துருவாக்கிகள், பங்காளிகள் எல்லாவற்றுக்கும் மேலாக சக மாணவரகளுக்காக உடலுழைப்பால் பங்காளர்களாக இருக்கும் மாணவர்கள் அனைவரும் போற்றுதற்குரியவர்கள்.
ஆரம்பம் முதல் இதனைப் பகிர வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும், இன்று ஆங்கில ஊடகமொன்றில் மூத்த ஊடகவியலாளர் ஜெகான் பெரேரா குறிப்பிட்டுக் காட்டியதற்குப் பிறகும் பகிராமல் இருக்க முடியவில்லை.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
குறள் 226 - [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
முழுப்பொருள்:
கடும் பசியில் இருப்பவனுக்கு நீ உணவளித்து அவனுடைய பசியை ஆற்றுவாயானால் நீ எங்கு போனாலும் உன்னுடன் இருக்கும் செல்வமாக அது அமையும்.
மூத்த ஊடகவியலாளர் ஜெகான் பெரேராவின் கட்டுரை ஒன்றில்
அவர் கோடி காட்டிய விடயம் ஆங்கிலத்தில் :
“In this bleak situation, academic staff at Jaffna University have set an example that the government can follow in winning the hearts and minds of students instead of punishing them so severely. It started when one of the faculty members observed his students come for his morning class without having had their breakfast. He started with giving the students in his class crackers and bananas. Next he was able to motivate two more of his colleagues to contribute to providing a free meal. This was three months ago. Today, the community action has increased to a level where they are able to supply more than 1200 students with a meal every day.
At a time when the government is being asked for evidence of its commitment to reconciliation and justice at the 51st UN Human Rights Council session in Geneva, the Jaffna academics have shown a spirit on the ground that the government needs to take on board nationally. Their establishment of a community kitchen for their students who are from all parts of the country and of different ethnicities and religions is national reconciliation in practice. “

ad

ad