புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2022

தேசிய சபையில் இரண்டு குழுக்களை அமைக்க முடிவு! [Friday 2022-09-30 07:00]

www.pungudutivuswiss.com


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு  இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது

பிரதமர் தினேஸ் குணவர்தன, அவை தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர்,பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் டிரன் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,சிசிர ஜயக்கொடி, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, சிவனேசத்துரை சந்திரகாந்தன், சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்து கொண்டார்.

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் நீண்ட கால தேசியக் கொள்கைகளை உருவாக்குவதற்காகவே தேசியக் கொள்கைக்கான துணைக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களில் உடன்பாட்டை எட்டுவதற்காகவே பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான துணைக் குழுவை நிறுவப்பட்டுள்ளது.

ad

ad