-
31 அக்., 2025
செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட பெண் சட்டத்தரணி! [Friday 2025-10-31 15:00]
|  கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை 90 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்ய தடுப்புக்காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (31) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி இதனை தெரிவித்துள்ளார் | 
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது! [Friday 2025-10-31 15:00]
|  திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது | 
| கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். | 
 
