புதன், நவம்பர் 13, 2019

இலங்கையில் 6G தொழில்நுட்ப புரட்சி

இலங்கையில் உள்ள இளம் சமூகத்தினரின் கோரிக்கையான 6G டிஜிட்டல் சமூகத்தை ஏற்படுத்த கூடிய ஒரே வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் விடுதலை மற்றும் அனைத்து தீர்மானங்களையும் இணையம் ஊடாக பெறும் சந்தர்ப்பத்தை சமகால இளம் சமூகத்தின் எதிர்பார்ப்பதாகும். அதற்கமைய இளம் சமூகத்திற்கு இணைய புரட்சியை ஏற்படுத்த கூடிய ஒரே கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளது.

6 இலக்கங்கள் கொண்ட சம்பளம் பெறும் தொழில் ஒன்றை பெறும் கனவு நனவாக்கப்படும். வாழ்க்கையின் அனைத்து சேவைகளை இணையத்தில் பெறும் சுதந்திரத்தை இளைஞர்கள் கேட்கின்றார்கள். இன்று உலகில் 4G தொழில்நுட்பம் உள்ளது. அடுத்த வருடம் 5G ஆக மாறும். 6Gயும் தற்போது தயாராகின்றது. இளைஞர்கள் வழங்கும் சவாலை ஏற்க நாம் தயார். டேட்டாவில் விடுதலை வழங்க நாம் தயார். இணையத்தில் புரட்சி செய்ய நாம் தயார். நாங்கள் தான் 6Gயை இந்த நாட்டிற்கு கொண்டுவரப்போகிறோம். உங்கள் கனவு நனவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்