புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 நவ., 2019

புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லைஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால்சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் மஹிந்த அணி!

விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் சந்திரிக்கா கூறி கருத்து திரிவுபடுத்தப்பட்டு போலிச் பிரச்சாரம் செய்யப்படுவதாக சந்திரிக்காவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என சந்திரிக்கா கூறவில்லை. சில ஊடங்கள் விசம பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது.

ஜனநாயகத்திற்கு எதிராக பயணித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள், வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறான போலி பிரச்சாரங்கள் மூலம் சந்திரிக்காவுக்கு எதிராக சேறு பூச முயற்சிப்பதாக அவரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு குற்றம் சுமத்தும் வகையில் தான் கருத்து வெளியிட்டதற்கான ஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால் விடுத்துள்ளார். அரசியல் நன்மைகள் பெறும் போக்கில் இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்வது வருத்தமளிப்பதாக ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது