தலைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான். அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல்.
இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்? இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின் ஃப்ளாஷ்பேக்!
""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊ