புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ரசிகர்களை உறைய வைத்த ஓலே ஓலா பாடல் 
உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், அமெரிக்க ராப்பரான பிட்புல்லுடன் சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த தொடக்க நிகழ்ச்சியானது பாலோ நகரில் உள்ள இடாகுராவ் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஜெனிபர் லோபஸ், பிட்புல் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த பாடகி கிளாடியா லீயட் ஆகியோர் கால்பந்தாட்ட போட்டியின் தீம் பாடலான வீ ஆர் ஒன் பாடலை பாடினர்.
இவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சியால் ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தது. பாடலை பாடி முடித்த பிறகு ஜெனிபர் லோபஸ் ரசிகர்களின் அன்பை பார்த்து உருகி கண்கள் கலங்கி நெஞ்சில் கையை வைத்து நன்றி தெரிவித்தார்.
கடந்த உலகக்கிண்ண தொடரின் தொடக்க விழாவில் அமெரிக்க பொப் பாடகி ஷகிரா ’வக்கா வக்கா’ என்ற பாடலை பாடினார். அந்த பாடல் உலகமெங்கும் கொடிகட்டி பறந்தது.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ’ஓலே ஓலா‘ என்ற இந்த ஆண்டிற்கான தீம் பாடலை பாட ஆரம்பித்து விட்டார்கள்.

ad

ad