புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

விமானத்தின் மூலம் பறந்து வந்த உலகக்கின்னதுக்கான பந்துகள்

பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து
விமானம் மூலம் பிரேசில் சென்றடைந்துள்ளது.
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பந்துகள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த உலக கிண்ணப் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துக்கு பிரசுகா என்ற பெயரை ரசிகர்கள் சூட்டி இருக்கிறார்கள்.
பிரசுகா என்பது பிரேசில் மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பந்தின் வடிவம் முப்பரிமாண முறையில் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பந்தின் வடிவம், எடை, அழுத்தம் ஆகியவை மழை பெய்தால் கூட மாறாது, இதை 2½ ஆண்டுகளாக வடிவமைத்துள்ளனர்.
பல வண்ணங்களில் மிளிரும் 69 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த பந்தின் எடை 437 கிராமாகும்.
மேலும், பந்தின் தரத்தை 10 நாடுகளை சேர்ந்த 300 வீரர்களிடம் விளையாட கொடுத்து சோதித்து இறுதி செய்துள்ளனர்.

ad

ad