புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? ஞா .ஸ்ரீநேசன்

அபரிமிதமான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது . இக் கட்சியானது 1949 இல் தமிழரசுக் கட்சியாகத் தோன்றியது . பின்னர் 1975 களில் தமிழ் மக்களின் விருப்புகட்கு அமைவாக தமிழர் விடுதலைக் கூட்டணியாக ( TULF ) வடிவமைக்கப்பட்டது .

அதனையடுத்து 2000 களின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது . இந்த ஐக்கியமான தமிழர்களின் கட்சியமைப்பில் தமிழரசுக் கட்சி என்பது அன்று தொட்டு இன்று வரை மிக முக்கியமான வகி பங்கினை ஆற்றி வருகின்றது .

அந்த வகையில் தற் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? என்ற கேள்வியினை சிலர் விளக்கமின்மையாலும் , சிலர் விதண்டாவாத நோக்கிலும் கேட்டு வருகின்றனர் .

அதற்கான விடைகளை வழங்குகின்றேன் .

01 இலங்கையில் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகமான குடி என்பதனையும் , இந்த நாட்டுக்கே உரிய தேசிய இனம் என்பதனையும் சர்வதேசம் வரை நிலைநாட்டி வருகின்றது .

இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை அன்று தொட்டு இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கின்றது . என்பதையும் , அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது .
சலுகைகளுக்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத உண்மைக் தமிழ்க் கட்சியாக விளங்குகின்றது .

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த கட்சியாக இருந்தது , இருக்கின்றது.

2015 இல் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் போது புதிய அரசியல் யாப்பு மூலமாக தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் அதிகமான பங்களிப்பினை வழங்கியது .

அந்த வகையில் 200 இற்கு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தினை அரசியல் யாப்பு நிருணய சபையாக அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) வழிகாட்டியது .

மேலும் வழிநடாத்தற்குழு, உபகுழுக்கள் என்பவற்றை அமைக்கவும் . இடைக்கால அறிக்கையினை உருவாக்கவும் வழி கோலியது . ஆனால், துரதிஷ்டவசமாக எதிர்த்தரப்பு அடிப்படைவாதிகள் சதிகளை மேற்கொண்டு அதனைக் குழப்பியதோடு, பேரின அடிப்படைவாதம் மூலமாக தேசிய இனப் பிரச்சனைக்கானத் தீர்வுக்கு முட்டுக்கட்டை போட்டனர் .


ஆக்கிரமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர்க் காணிகள் விடுவிக்கப்படுவதற்கும் அக் காணிகளை மக்கள் கையேற்ப்பதற்கும் வழி செய்யப்பட்டது.

சிறையில் வாடிய 217 கைதிகளில் 130 கைதிகள் விடுவிக்கப்படக்கூடிய நல்லாட்சிக் கால சூழ் நிலையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஏற்படுத்தியிருந்தது .


2015 – 2019 வரை ஆட் கடத்தல்கள் , காணாமல் ஆக்கப்படுத்தல்கள் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது .

ஆட்சியாளர்கள் , ஏனைய அரசியல்வாதிகள் , அராஜகர்கள் , அதிகாரிகள் அனைவரையும் விமர்சனம் செய்யக்கூடிய ஊடகச் சுதந்திரம்
உருவாக்குவதற்கு வழிகோலியமை .


பாரிய குற்றமிளைத்தும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படாமல் இருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் , தண்டிக்கவும் கூடிய ஜனநாயக சூழல் உருவாக உதவியமை .

பயமும் – பயங்கரமும் ,அராஜகமும் – அடாவடித்தனமும் , கொடுமையும் – கொடூரமும் இருந்த நாட்டுச் சூழ்நிலையினை நல்லாட்சிச் சூழல் மூலமாக ஜனநாயகமும் , சட்ட வாட்சியும் மாற்றியமைப்பதில் பங்காளிகளாக எமது கட்சியும் இருந்தமை .

ஊரக எழுச்சித் திட்டம் , துரித அபிவிருத்தித் திட்டம் , ரண் மாவத் திட்டம் , வீதி புனரமைப்புத் திட்டம் , குடி நீர் வழங்கல் திட்டம் , பன்முக வரவு செலவுத் திட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி வீதிகள் புனரமைப்பு ,கோவில்கள் , தேவாலயங்கள் புனரமைப்பு , மைதான அபிவிருத்தி , பாடசாலை பௌதிக அபிவிருத்தி ,விவசாயக் கிணறுகள் அமைத்தல் போன்றவற்றினை மேற்கொண்டிருந்தோம் .

( உ + ம் பதவிக் காலம் முழுமையாகாத நிலையில் 04 ஆண்டுகள் காலத்தில் ஏறத்தாழ ரூபா 760 மில்லியன் ( 76 கோடி ) என்னால் மேற்படி அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது . இது போன்று எமது 15 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அபிவிருத்திகள் செய்திருப்பார்கள் .)


வீடமைப்பு நிருமான அமைச்சு மூலமாக எமது மாவட்டத்தில் சுமார் 7000 வரையிலான வீடுகளைக் கட்டுவதற்கான செயற்பாடுகளை (NHDA) மூலமாக முன்னெடுப்பதில் பங்கு கொண்டோம் . இதே போன்று வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டிருந்தோம் . ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டத்தின் முன்னெடுப்பு தொடராதுள்ளது .

தடைப்பட்ட நிலையில் முடக்கப்பட்டிருந்த கிராமியப் பால அமைப்புத் திட்டத்தினை பல முயற்சிகளின் மூலம் முன்னெடுத்து மட்டக்களப்பில் பல பாலங்களை முடித்துள்ளோம் . இதே போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பல கிராமியப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

விளையாட்டுக் கழகங்கள் , இளைஞர்கள் கழகங்கள் , மகளீர் சங்கங்கள் , சிரேஷ்ட பிரசைகள் அமைப்புகள் ,கிராம அபிவிருத்திச் சங்கங்கள் , ஆலய பரிபாலன அமைப்புகள் போன்றவற்றின் வேண்டுகோள்களில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளோம் .

2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு முடியுமான நிவாரண உதவிகளை செய்திருக்கின்றது .

ad

ad