வியாழன், நவம்பர் 21, 2019

மண்கும்பானி ல் இடம்பெற்ற பாரிய விபத்து! மோடடார் சைக்கிளில் பயணித்தவரின் நிலை!

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோடடார் சைக்கில்மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மண்கும்பான் பிள்ளையார் கோவில் கடந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோடடார் சைக்கில் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியது.

இந்த விபத்தில் உந்துருளியை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.