புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2019

சற்று முன்னர் பிரதமராக பவியேற்றார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு கடமைகளை ஏற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமராக தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவர் இன்றைய தினம் நியமித்திருக்கின்றார்.

இதனடிப்படையில், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்பாக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். அதேவேளை இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், அங்கஜன் ராமநாதன், ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ச, கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை அவர் இலங்கையின் 13ஆவது பிரதமராக பிரதமராக கடமைபுரிந்திருந்தார்.அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்த நிலையில், பின்னர் 2015ஆம் ஆண்டில் ஆட்சிகவிழ்ந்தது.

பின்னர் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் பதவியிழந்தார். சுமார் ஒருவருடத்திற்குப் பின்னர் தற்போது பிரதமராக அவர் மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad