புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014



சென்னை கட்டிட விபத்து : தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகள் கைது

 சென்னை காவல்துறை அறிக்கையில்,   ‘’சென்னை போரூர் மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டிடம் கடந்த 28.6.2014 அன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. 


கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட கட்டுமான தொழிலாளர்களை மீட்பதற்காக சென்னை காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் கூடுதல் ஆணையாளர்கள் கருணாசாகர், ஆபாஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மருத்துவ குழுவினர், சென்னை காவல் அதிரடி படையினர் மற்றும் காவல் குழுவினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அதிகாரிகள் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்து தொடர்பாக மாங்காடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
விசாரணையில், இவ்விபத்திற்கு காரணமாக இருந்ததாக பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மனோகரன் (60), மனோகரனுடைய மகனும் இயக்குனருமான முத்துகாமாட்சி, விஜய் பர்ஹோத்ரா, வெங்கடசுப்பிரமணி, சைட் இஞ்சினியர்கள் சங்கர் ராமகிருஷ்ணன்(24) மற்றும் துரைசிங்கம் ஆகிய 6 பேர் கடந்த 29.6.2014 அன்று கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கினை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் தேடி வந்த நிலையில், இன்று (8.7.2014) காலை லேக் வியூவ் எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, மௌலிவாக்கம் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரும் மனோகரனின் மைத்துனருமான எம்.பாலகுருசாமி (54) லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர், மதுரை மற்றும் சைட் இஞ்சினியர் கார்த்திக் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad