ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும், இலங்கை விவகாரம், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை
டெலோ அமை;பபிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.
ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.
இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.