புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 நவ., 2019

விளக்குகளை அணைத்து சஜித்தின் ஹெலியை இறங்க விடாமல் தடுத்த 'மொட்டு

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர் பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் தடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர் பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் தடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக்க அபயசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சஜித் பிரேமதாச பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு பல தடவை முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த பகுதி முழுவதும் வெளிச்சமற்று கடும் இருளாக காணப்பட்டதால் அது சாத்தியமாகவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமலே பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையேற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித்பிரேமதாசவின் ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என இணையமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டர் தரையிறங்யிருந்த பகுதிக்கான மின்சாரத்தை , பொதுஜன பெரமுனவின் வசமுள்ள குருநாகல் மாநாகர சபை துண்டித்தது. இதனால் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியில் குருநாகல் பிரச்சாரத்தை ஜனாதிபதி வேட்பாளர் கைவிட வேண்டிய நிலையேற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்