காசா மோதல்களின்போது பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தியது முதலான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெத்தன்யாஹூ மீது கைது வாரண்ட் பிறப்பித்தது. 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கனடா, சர்வதேச குற்றவியல் அமைப்பின் உறுப்பினர் என்னும் வகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் மனித உரிமைகள் அமைப்புகளின் பாராட்டைப் பெற்றாலும், தூதரக உறவுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் உருவாகியுள்ளது. |