1 நவ., 2019

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ்!

வியாழன் அக்டோபர் 31, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த கருவியில் த.வி.பு 055 என்று அடையாளமிடப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இதுபோன்ற கருவிகள் கடல்வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.