திங்கள், நவம்பர் 04, 2019

யார் வென்றாலும் ஜெனிவாவில் நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும், இலங்கை விவகாரம், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து இந்தக் கூட்டத்தில், முக்கிய கவனம் செலுத்தப்படும்.

சவேந்திர சில்வா நியமனம் இலங்கையின் உள்நாட்டு அரசியல் முடிவு என்றும், அதை மாற்ற தாம் தயாரில்லை என்றும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தெரிவித்திருந்தனர். இருப்பினும், இவர்களது இந்த கருத்து குறித்து மேற்கத்திய நாடுகள் கோபமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜெனீவா தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில்இராஜதந்திர சமூகத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.