புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 நவ., 2019

அவரசமாக கூடுகின்றது சந்திரிகா தரப்பு!

சஜித் தரப்புடன் இணைந்தமையால் சந்திரிகாவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென மகிந்த-கோத்தா தரப்பு அழுத்தங்களை கொடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுக் கருத்துள்ள குழுவின் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பான ஆராயும் விசேட கூட்டமொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இன்று அத்தனகல்லயில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் பங்கேற்குமாறு சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விரும்பு அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாற்றுக் கருத்து தரப்பினரின் மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன