யில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் முன்னிலையான முருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு சிறையிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து வருகிறார்.
முருகனை தனி அறையில் அடைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் பெண்கள் சிறையிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 6-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த நிலையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றில் முருகன் இன்று முன்னிலையானார் பலத்த பாதுகாப்புடன் காவல் துறை அவரை வானில் நீதிமன்றம் அழைத்து வந்தனர்.
வேலூர் 1-வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் முருகனை ஆஜர்படுத்தினர். நீதிபதி நிஷா வழக்கு விசாரணையை 13-ந் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து முருகனை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். கோர்ட்டில் முருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறை வளாகத்திற்குள் அதிகாரிகள், காவலர்களை மீறி மூச்சுவிட கூட முடியாது அப்படி இருக்கும்போது ஜெயிலுக்குள் செல்போனை எப்படி பயன்படுத்த முடியும். நானும் எனது மனைவி நளினியும் மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வருகிறோம்.
மேலும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இதனை தடுக்க சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதிசெய்துள்ளனர். இதனை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும். சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.
எப்படிப்பட்ட கொடுமை என்பதை இப்போது சொல்ல முடியாது. எங்களுடைய விடுதலையையும் பரோலையும் தடுக்கவே இவ்வளவு சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. சிறைக்குள் ஆன்மீகவாதியாக கூட இருக்க விட மறுக்கிறார்கள். புரட்டாசி மாதம் ஒரே ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தேன். தற்போது எனக்கு நேர்ந்த சதியால் 14-வது நாளாக சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்