புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2019

கஜா, விக்கியின் அறிவிப்பினால் சஜித் தோல்வி உறுதி

சஜித் பிரேமதாஸவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டு மக்கள் இரண்டு பிரதான தரப்பு சார்ந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும், சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க போவதில்லையென அறிவித்துள்ளனர்.

எனவே சஜித்தின் பெரும் நம்பிக்கையாக காணப்பட்ட, வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு தற்போது இல்லாமல் போயுள்ளது.

இதன்காரணமாக சஜித் பிரேமதாஸவின் தோல்வி தற்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad