8 ஜூலை, 2019

வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை

வட­ம­ராட்­சி­ - துன்னாலைப் பகுதியில் ­சுமார் 70 பவுண் நகை­க­ளும், 10 லட்­சம் ரூபா­ பணமும், கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். வெளி­நாட்­டில் இருந்த புலம்­பெ­யர் உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

வீட்­டின் பின்­பக்க ஜன்­னல் கம்­பி­களை அறுத்து கொள்­ளை­யர்­கள் வீட்­டி­லுள் இறங்­கி­யுள்­னர். வீட்­டில் இருந்­த­வர்­களுக்கு மயக்க மருந்து தெளித்து மயக்­கியே கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர் என்று விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் பருத்­தித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

சம்­பவ இடத்­துக்கு மோப்ப நாய்­கள், மற்­றும் சோக்கோ பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் விரைந்­த­னர். அவர்­கள் அங்கு விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­ட­னர். கைரேகை அடை­யா­ளங்­க­ளைப் பதிவு செய்­வ­தற்கு முயன்­ற­னர். எனி­னும் கொள்­ளை­யர்­கள் கையு­றை­யைப் பயன்­ப­டுத்­தியே மின்­கு­மிழ்­க­ளைக் கழற்­றி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது