புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2019

அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!

அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது. 3 நாட்கள் பயணத் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம் நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளது.இந்தியாவுக்கு செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை இலங்கை வழியாக திட்டமிடப்பட்டுள்ளமை அடுத்து குறித்த விமானம் நேற்று தரையிறங்கியுள்ளது.

எனினும் குறித்த விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், நாட்டில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது

ad

ad