புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை!- ஜி.கே. வாசன்
தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
வெலிங்டன் இராணுவ மையத்தில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்று அனைத்துக் கட்சி தலைவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இலங்கை இராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய கப்பல் துறை மந்திரி ஜி.கே. வாசன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
மத்திய இராணுவ மந்திரியை டெல்லியில் சந்தித்து இது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறுவோம்.
இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக காங்கிரசும் உறுதியாக உள்ளது. இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.

ad

ad