புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


குடியேற்ற அனுமதி வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுங்கள்: தமிழ் அகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்க முடியாவிட்டால், தம்மை கருணை அடிப்படையில் கொன்று விடுமாறு இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மனிதாபிமானம் உள்ளதாக கருதி அவுஸ்திரேலியா வந்தபோதும் அங்கும் மனிதாபிமானத்துக்கு இடமில்லை. எனவே தம்மை கருணை அடிப்படையில் கொன்று விடுமாறு சசி என்ற அந்த இலங்கை அகதி கோரியுள்ளார்.
எனினும், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் இருந்து இந்த கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெ வேல்ட் டுடே குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இது தனிப்பட்ட ஒருவருடைய விடயம் என்பதால் கருத்துக்கூற முடியாது என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தெ வேல்ட் டுடே சுட்டிக்காட்டியுள்ளது.
நிர்க்கதியாக இருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு அகதி அந்தஸ்தை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டபோதும் இன்னும் அவர் அந்த நாட்டின் பாதுகாப்பு சட்டத்துக்கு கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20009 ஆம் ஆண்டு 77 பேருடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஓசியானிக் வைக்கிங் கப்பலில் 2005ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் அகதியாக இருந்த சசி என்பவரும் உள்ளடங்கியிருந்தார்.
அவர் சிறந்த ஆங்கில புலமையை கொண்டிருந்தமையால், அவர் தம்முடன் வந்திருந்தவர்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேசக்கூடியவராக இருந்தார்.
அத்துடன், இந்தக் கப்பலை அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றிய போதும் அது இந்தோனேசிய கடற்பரப்பு ஆகையால், கப்பலை இந்தோனேசியாவுக்கு அனுப்ப, அவுஸ்திரேலிய அதிகாரிகள் முயற்சித்தனர்.
எனினும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னரே தாம் கப்பலில் இருந்து இறங்க முடியும் என்று அகதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவும் தமது நாட்டில் அல்லது மூன்றாம் நாடொன்றில் குடியேற்றுவதாக இந்த அகதிகளுக்கு உறுதியளித்தது. எனினும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அத்துடன் கப்பலில் பயணித்த சசி என்பவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவின் அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை என்று அவரின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மூன்று வருடங்களின் பின்னர் தமது கட்சிக்காரரான சசி கருணைக்கொலை தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ad

ad