புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


சிங்களமயமாக்கும் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க இத்தேர்தல் நல்ல வாய்ப்பு: ஸ்ரீகாந்தா
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம்.  இதில் ஒரு சதுர அங்குல நிலத்தைக் கூட சிங்கள மயமாக்குவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா
தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து, செங்கலடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் இறுதிவரை தங்களை அர்ப்பணித்த அமரர் .மணிக்கவாசகம், அமரர். சம்மந்தமூர்த்தி ஆகியோர் வாழ்ந்த செங்கலடி மண்ணிலே தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க நானும் வந்துள்ளேன்.
படை பலம், அதிகார பலம், இனவெறி கொண்ட ஒரு அரசாங்கம் நிறுத்தியிருக்கின்ற கூலிக் கும்பலுக்கும் தமிழ் தேசியத்தில் பாதையில் களமிறங்கியிருக்கியிருக்கும் சுயமரியாதை கொண்ட தமிழர்களுக்குமிடையிலான பல பரீட்சைதான் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.
எமது மக்கள் சுயமரியாதை கொண்ட எமது மண்ணின் மைந்தர்கள் அனைவரும் சுதந்திரத்தின் பேரால் விடுதலையின் பேரால் இந்த மண்ணிலே வாழ்ந்து மறைந்த எமது முன்னோர்களின் முச்சு பேச்சின் பேரால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
கிழக்கு மண்ணை வடக்கு மண்ணிலிருந்து பிரித்தெடுத்து, எங்களுடைய பிரதேசத்தை வெட்டி பிளந்து கிழக்கு என்று எமது மண்ணிலே மேலும் சிங்க குடியேற்றத்தை செய்து, சிங்கள மயமாக்கும் இந்த அரசுக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் கருதவேண்டும். இந்த மண் எங்கள் சொந்த மண் நாங்கள் வந்தேறிய குடிகள் அல்ல.
நடந்து முடிந்த யுத்த காலத்திலே தமிழர் தாயகத்தில் வடக்கு பகுதி மக்களை விட கிழக்கு மக்கள் அதிக துன்ப துயரங்களை சந்தித்திருக்கிறார்கள். இந்த மண்ணிலே எத்தனை கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை இந்த மக்கள் அனுபவ ரீதியாக அறிவார்கள்.
கிழக்கு யுத்தம் முடிவடையும் வரை ஒரு வேட்டைக்களமாக தொடர்ந்து காணப்பட்டது. 1982 ஆம் ஆண்டிலிருந்து இடை இடையே வந்து போன சில சமாதான நடவடிக்கைகள் தவிர சுமார் 25 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மண் விலை மதிக்க முடியாத உயிர் இழப்புகளையும், சோசங்களையும் சந்தித்து வந்துள்ளது.
1958 ஆம் ஆண்டு இந்த மண்ணிலே ஸ்ரீபன் தம்பிராஜா, இராஜேந்திரன் என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து 2008 ஆண்டு ஒட்டு மொத்த மக்களும் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டவரை எமது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தமிழர்களின் விடுதலை எழுச்சி அகிம்சை வழியில் இருந்து, விடுதலை இயக்கங்களின் கைகளில் இருந்து ஒரு விடுதலை இயக்கத்தின் கைகளிலிருந்து தற்போது ஒட்டு மொத்த தமிழர்களின் கைகளுக்கு வந்துள்ளது.
எங்கள் மக்கள் சுதந்திரமாக வாழத் துடிக்கிறார்கள். அற்ப சொற்ப சலுகைகளை காட்டி எங்களை ஏமாற்றிவிட முடியாது. ஒரு சமூகம் சுதந்திரமாக வாழத் தீர்மானித்து விட்டால் அதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு சொல்லுங்கள்.
எமது மண்ணிலே எத்தனை துன்பங்களை நாம் அனுபவித்தோம் அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒன்றுபட்ட இலங்கை தீவுக்குள்ளே ஒரு சமாதான தீர்வுக்கு தயார் என்று மீண்டும் மீண்டும் இந்த யுத்தம் நடக்கும் போதும் முடிவடைந்த நாள் முதலாய் கூறிவருகிறோம். ஆனால் அரசாங்கம் யத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்த பின்பும் என்ன செய்கிறது.
இந்த தேர்தலில் எமது கடமையைச் செய்ய வேண்டும் கடமையைச் செய்ய தவறிவிட்டு கவலைப் பட முடியாது எமது இனம் அடங்கி வாழ்ந்த இனம் அல்ல ஒரு நீண்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் எமது முதியோரின் ஆண்ட பரம்பரையில் வாரிசுகள் நாங்கள். அந்த வெறி அந்த பெருமை அந்த வைராக்கியம் அந்த நேர்மை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் இல்லாதவர்களை இந்த தேர்தலிலே தூக்கியெறியுங்கள்.
தமிழர் தாயகத்தில் புதைக்கப்பட்டுள்ள எமது போராளிகளின் மண்டையோடுகளும் எழும்புக் கூடுகளும் சிதைக்கப்பட்ட அந்த யதார்த்தத்தை, சுயமரியாதை கொண்ட எந்த தமிழனும் மறக்க மாட்டான். இந்த யதார்ததத்தின் பின்பும் எங்கள் இனம் எழுந்து நிற்க தயாராகி விட்டோம் என்பதை இந்த தேர்தலின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டும்.
ஒரு சுதந்திர சமூகமாக நாங்கள் உலகறிய அங்கீகரிக்கப்படுகின்ற நிலையிலே ஒரே நாட்டுக்குள்ளே நாங்கள் விரும்புகின்ற சுயாட்சியை, வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியை எங்கள் சொந்த மண்ணை நாங்களே கூடிய வகையில் வேண்டும் என்பதை இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டுங்கள் என தெரிவித்தார்.

ad

ad