உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள்! முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு!
கொத்தமங்கலத்தில் மே. 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ இன்று உலகத் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய நாள் என்று பேசினார்.
மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழீழ சுதந்திர சாசனம் இன்று முரசறைவு: ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது
யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.
கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர்,
லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை!
இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி:மன்னாரில் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைதின் பின்னணியென்ன? விரிவான தகவல்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட பதினைந்து
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விருதுநகரில் மதிமுக மாநாடு நடைபெறும் என்று விருதுநகர் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.BBC
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தி
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.BBC
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக் கடலூர் வந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் திருமண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்