புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013

உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள்!
 முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில்
 அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு! 
கொத்தமங்கலத்தில் மே. 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ இன்று உலகத் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய நாள் என்று பேசினார்.
nakkeran

இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களின் இன அழிப்பை ராஜபக்சே தலைமையில் இயங்கிவரும் சிங்கள அரசு செய்தது. இந்த நாளில் மட்டும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று பல ஆயிரம் பேர்கள் வரை கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டனர். இளைஞர்கள் சித்தரவதைகள் செய்து கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் விதமாக மே 18 ம் நாள் உலகத் தமிழர்கள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ம.தி.மு.க மற்றும் தமிழின உணர்வாளர்கள் ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்ச்சியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ., கு.ப. கிருஷ்ணன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பிறகு அந்த வழியாக காய்கறி விற்றுக் கொண்டு வந்த வாகனத்தில் இருந்த ஒளிபெருக்கியை வாங்கி, உலக இனம் தமிழினம். அந்த இனம் இன்று அழிக்கபட்டு வருகிறது. மே. 18 ம் நாள் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை நினைத்துப் பார்க்கும் முகமாகவே இந்த அஞ்சலி நிகழச்சி நடக்கிறது. இந்த நாள் உலக தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய நாள். அதனால் இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று பேசினார். 
விழாவில் ம.தி.மு.க லோகநாதன், ஆனந்தன், நாம் தமிழர் காசிலிங்கம், அ.தி.மு.க திருவரங்குளம் ஒன்றிய துணை சேர்மன் பழனிச்சாமி, நடத்துனர் ஓய்வு ரெத்தினம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி, படங்கள்: பகத்சிங்

ad

ad