புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


தமிழீழ சுதந்திர சாசனம் இன்று முரசறைவு: ஈழவிடுதலைப் போராட்டத்தி​ல் வரலாற்று முன்னகர்வு!.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது
இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.
இந்முரசறைவினை உணர்வெழுச்சியோடு, ஏந்திக்கொள்ளும் வண்ணம் உலகின் பல்வேறு நாடுகளிலும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கனடா: MEL LASTMAN SQUATRE / 5100 Yong and Sheppad எனும் இடத்தில் பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை.
பிரித்தானியா: ZOROASTRIAN  CENTRE/Alexandra Avenue/Rayeners Lane /HA2 9TL எனும் இடத்தில் மாலை 5 மணி. ஆகிய இடங்களில் இடம்பெறுகின்றது.
வரலாற்று முக்கியத்துவம் பெறும் மே-18
2009ம் ஆண்டு மே-18ம் நாளுடன் தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை வென்றுவிட்டதன் ஊடாக, தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் வெற்றிக்களிப்பில் இருந்தவேளை, மே-18ல் நாளிலேயே 2010ம் ஆண்டு தோற்றம் பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சிங்களத்திற்கு சவலாக மாறியது.
இன்று (2013) அதே மே18ம் நாளில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறைந்து, தமிழீழம் நோக்கிய தங்களது விடுதலைப் பாதையினை அனைத்துலகின் முன் தெளிவாக முன்வைக்கின்றனர்.

ad

ad