தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற