புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2019

தெற்கின் நிலவரங்களை தமிழ்மக்கள் மாற்ற வேண்டும்! - கூட்டமைப்பு

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் நேற்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் கேலி செய்கின்றனர். நாங்கள் எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.

“அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை.

“இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக் கொள்கின்றோம்” என்றார்.

இங்கு உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார்.

“2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். “போட்டியிடாவிட்டால் உயிரை விட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்காவிட்டாலும், இன்று தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. போட்டி பலமானது.

“2015ஆம் ஆண்டு இருந்ததை விட மாறுப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று நாங்கள் அனைவரும் உள்ளோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்.

“இப்பொழுதும் ஒரு தரப்பினர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்ற ஒரு நிலைமையே இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் ராஜித, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.” என்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமானது. கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்.,தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

ad

ad