புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2013


வடக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி
பிரதேசங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீள பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் தொடர்ந்தும் தாம் செயற்பட்டு வருகிறேன்.
காலக்கிரமத்தில் இவற்றுக்கான உரிய தீர்வு வழங்கப்படும்.
இந்த நிலையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் உங்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சரியானவர்களை தெரிவு செய்யுங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சு வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த போதும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தமது முதலமைச்சு வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad